America: மீண்டும் டிரம்ப்யை கொல்ல சதி!

Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கமலா ஹாரிஸை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது, இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் மற்றும் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதானத்தில் நடந்த சம்பவம், இரண்டுமே மிகுந்த கவலைக்குரியவை.

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்டு டிரம்பை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க நீதித்துறை துறை, ஈரான் நாட்டின் துணை ராணுவ குழுவின் ஒரு உறுப்பினர் டொனால்டு டிரம்பை கொல்ல முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நபர், டிரம்பை கண்காணித்து, கொல்ல முயற்சி செய்துள்ளார். மேலும், ஈரானை வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரையும் கொல்ல முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க மக்களையும், தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக. ஈரான், டிரம்ப் ஆட்சியின்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஈரான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரான் அரசால் இயக்கப்படும் சிலர், அமெரிக்கா மண்ணிலும் வெளிநாட்டிலும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் உட்பட அமெரிக்க குடிமக்களைத் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *