Petrol bomb attack: அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி!

அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி! அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை: அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளருக்கு பேட்டியளித்தசட்டத்துறை அமைச்சர் ரகுபதி  ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஏற்கனவே சிறையில் இருந்து விட்டு வந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.Petrol bomb attack

தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வு காட்டவில்லை. ஆளுநர்தான் தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.மேலும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *