விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்!

Advertisements

சென்னை:

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாகச் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டது.

இந்த ஆண்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த தால் சென்னையிலிருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இதனால் வெளியூர் சென்ற மக்கள் சென்னைக்கு சனிக்கிழமை முதல் புறப்பட்டு வரத் தொடங்கினார்கள்.

தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் புறப்பட்டு வந்தனர்.

சொந்த வாகனங்களில் சென்றவர்களும் 2 நாட்களாகச் சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று தாம்பரம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று மாலையிலிருந்து சாலைகளில் வாக னங்கள் அணிவகுத்து நின்றன. தேசிய நெடுஞ் சாலையில் வேகமாக வந்த வாகனங்கள் பின்னர் அச்சரப்பாக்கம், ஆத்தூர் சுங்கச் சாவடியில் கடந்து செல்லத் திணறியதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

தொடர்ந்து மேல் மருவத்தூர், மதுராந்தகம் வரை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்திலேயே வாகனங்கள் செல்ல முடிந்தது.

அதனைத் தொடர்ந்து பரனூர் சுங்கச்சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கப்பெரு மாள் கோவில், கிளாம் பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் இன்று காலையிலிருந்து கடுமையான நெரிசல் காணப்பட்டது.

கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு வந்த அரசு பஸ்களிலிருந்து இறங்கிய மக்கள் ஆட்டோ, மாநகர பஸ், மின்சார ரெயில்களில் மாறிச் சென்றனர்.

பெருங் களத்தூரிலும் பலர் இறங்கி மாறியதால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் முடங்கின.

மேலும் வெளியூர் சென்ற வர்கள் மின்சார ரெயிலில் ஏறித் தங்கள் பகுதிகளுக்குச் சென்றதால் ரெயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வண்டலூர் பைபாஸ் சாலை வழியாகக் கோயம்பேடு வந்த ஆம்னி பஸ்களால் பூந்தமல்லி, வானகரம், மதுரவாயல் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வானகரம் மதுரவாய லில் பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போலீசார் நகருக்குள் செல்ல அனு மதிக்கவில்லை.

மதுரவாயல்-கோயம் பேடு சாலையில் வாகனங் கள் நெரிசலில் சிக்கியதால் வெளியூர்களிலிருந்து வந்த பஸ்கள் தடுத்து நிறுத் தப்பட்டன. போரூர் சுங்கச் சாவடி வழியாகச் செல்ல அறிவுறுத்தினர். இதன் காரணமாகக் கோயம்பேடு பகுதிக்கு வரக்கூடிய அரசு, ஆம்னி பஸ்கள் சிரமப் பட்டன.

வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தாம்பரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. மேலும் மெட்ரோ ரெயில்களிலும் காலையிலிருந்து கூட்டம் அதிகரித்தது. கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகாலையிலிருந்து காலை 9 மணிவரை வந்த அரசு பஸ்கள், ஆம்னி பஸ் களால் நெரிசல் உண்டானது. மேலும் தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரெயில் களில் வந்து இறங்கிய பயணிகளால எழும்பூர், கிண்டி ரெயில் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்ட்ரல் நிலையத்திற்கு வந்த ரெயில் நிலையங்களி லும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சென்னையில் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள் இன்று பரபரப்பாகக் காணப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *