
அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்செத் சென்ற விமானத்தில் விரிசல் ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தறையிரக்கப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார்.
அதன் பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அப்போது, நடுவானில் சென்றபோது விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதனால், விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் பீட் ஹெக்செத் உள்பட அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.
இதில், விமானியின் சாமர்த்தியத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.




