
ஹோம்லி லுக்! பவித்ரா ஜனனி சல்வார் கலெக்ஷன்ஸ்…

சினிமா நடிகைகளைவிட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது தான்.
இந்த வரிசையில் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் நடித்து வரும் நடிகை பவித்ரா ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில் இவர்களுக்கிடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்தச் சீரியலில் வெற்றி – அபி இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கும், மோதல் காட்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிரபல நடிகை அனுஷ்கா தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவித்ரா ஜனனி சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

