நடிகை விஜயலட்சுமி தன்னை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், “சீமான் – விஜயலட்சுமி விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால் என்னுடைய ஆலோசனையை வழங்குவேன், தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னைகுறித்து பேசுவது சரியானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.


