Pattinacherry Fishermens: 8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Advertisements

காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களுக்கு மேலாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தங்களது கோரிக்கைகளை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவர்கள் தங்களது பகுதியில் மீன் பிடி துறைமுகம் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 25ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு மேலாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் நாளைத் தங்களது ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகப் போராட்டம் அறிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை அடுத்து தங்களது கோரிக்கைகளை விரைவில் புதுச்சேரி அரசு சார்பில் செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து பட்டினச்சேரி மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *