Advertisements
Parliament Winter Session: டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் தொடங்கும் டிசம்பர் மாதத்திற்கு முன்பே முடிந்து விடும்.
ஆனால் 5 மாநில சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 2- ஆவது வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 25 -ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை அதற்கு முன்பாகவே முடிவடைந்துவிடும் என்று தெரிகிறது.
இந்திய தண்டனைச் சட்டம். குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியங்கள் பற்றிய சட்டம் குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.