Diwali – Central Railway Station: ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம்!

Advertisements

Diwali – Central Railway Station: தீபாவளி பண்டிகையை ஒட்டி, கடந்த 3 நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளனர்.தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்றும் பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக நேற்று சென்னை எழும்பூர் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர்.

அதேபோல் கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் உள்பட சிறப்பு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்புப் பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் 3,66,080 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இதுவரை 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி, கடந்த 3 நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் மூலம் 7 லட்சம் பேர் பயணித்துள்ளனர் எனவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத் உட்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *