நாடாளுமன்றத்தின் முன் எதிர்க்கட்சியினர்போராட்டம்..!

புதிய தொழிலாளர் சட்ட விதிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தின் முன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலைகளிலும் வணிக நிறுவனங்களிலும் பெண்கள் விருப்பப்பட்டால் இரவிலும் பணியாற்றுவது, ஒப்பந்தப் பணியை ஊக்குவிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிலாளர் சட்டத்தின் புதிய விதிகள் அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ளன. தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்தச் சட்ட விதிகள் உள்ளதாகக் கூறி இவற்றைத் தொழிற்சங்கத்தினரும் எதிர்க்கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொழிலார் சட்ட விதிகளைத் திரும்பப் பெறக் கோரி முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *