Parati Nair: ஜாக்கெட் டிசைனைப் பார்த்தே மயங்கும் ரசிகர்கள்..!

Advertisements

நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் கணிசமான படங்களில் நடித்துக் கவனம் பெற்ற நடிகையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.

நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், மலையாள சினிமாவிலும் கவனிக்கப்படு நடிகையாக உள்ளார். அபுதாபியில் உள்ள மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர்.

டீன் ஏஜில் இருந்தே நடிப்பு மற்றும் மாடலிங்கில் அதிக ஆர்வம் உடையவரான பார்வதி நாயர். மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் அந்தக் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் நடிப்பினை வெளிப்படுத்தினார்.

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அட்டகாசமான நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அமர்க்களப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகின்றார். தனது அட்டகாசமான நடிப்பினால் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

முதலில் விளம்பரங்களில் நடித்து அதன் பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக அவர் அணிந்துள்ள ஜாக்கெட் அதில் இருக்கும் டிசைன் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *