‘வாழு, வாழ விடு’ தனுஷ் வீடியோவைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் பதிலடி!

Advertisements

நடிகை நயன்தாரா தனுஷ் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனுஷூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ‘ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு இன்னொருவர் மீது வெறுப்பாக மாறக் கூடாது. அப்படி மாறினால் அந்த உணர்வுக்கு அர்த்தம் கிடையாது. யாருக்கும் யார் நன்றாக இருந்தாலும் பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு நெகட்டிவிட்டி சுற்றிலும் கொட்டிக் கிடக்கிறது.

வாழு, வாழ விடு. யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது. பிடித்தால் கொண்டாடுங்கள், பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள். இது பெரிய ராஜதந்திரம் எல்லாம் கிடையாது’ என்று தனுஷ் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், ‘அடுத்தவர்கள் மகிழ்ச்சியில் நீங்களும் மகிழ்ச்சியை கண்டுபிடியுங்கள். உங்களை நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக உண்மையாக இருங்கள். வாழு, வாழ விடு’ என்று தனுஷூக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற அவரது டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. அதில் விக்னேஷ்சிவன் நயன்தாராவின் காதல் மலர்ந்த படமான ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளை இந்த டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் தனுஷ் தன் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட வன்மம் தானென நயன்தாரா குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *