Advertisements

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டிருந்த சமயத்தில் படையப்பா படம் வெளியானது. அந்த சமயத்தில் படையப்பா படச்சுருளை ரஜினிகாந்த் மிக தைரியமாக ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் தோட்டத்திற்கு அனுப்பி இருக்கிறார் அவரும் முழுமையாக படத்தை பார்த்திருக்கிறார் . இதன்பிறகு என்ன நடந்தது என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் படையப்பா படம் குறித்து ஏராளமான புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார் .
கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா திரைப்படம் வெளியானது . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நடிகை சௌந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர் . வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் ,செந்தில் ரமேஷ், கண்ணா, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகும் இதில் வரும் அனைத்து பாடல் காட்சிகளும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட வரலாற்றில் ஏராளமான திரைப்படங்கள் முக்கியமானவை அதில் படையப்பாவும் ஒன்று . வருகிற 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் ஆகும். இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மீண்டும் வெளி வருகிறது . இந்த நிலையில் படையப்பா திரைப்படம் குறித்து அந்த படம் எப்படி எடுக்கப்பட்டது .
நீலாம்பரி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணன் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதெல்லாம் குறித்து ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் .
அந்த வீடியோவில் படையப்பா படத்திற்கு நீலாம்பரி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் எப்படி தேர்வு செய்யப்பட்டார். அந்த படத்தின் கதை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள நந்தினி கேரக்டரின் பாதிப்பு என்று கூறி இருக்கிறார் . பல நடிகைகளை நீலாம்பரி கேரக்டருக்கு சோதித்து பார்த்தும் சரியாக வரவில்லை என்றும், கடைசியாக ரம்யா கிருஷ்ணனை இயக்குனர் ரவிக்குமார் தன்னிடம் அறிமுகம் செய்தார்.
என்றும், அப்போது அரை மனதாக தான் அதற்கு சம்மதித்ததாகவும் ஆனால் மேக்கப் எல்லாம் போட்டு பார்த்த பிறகு பொருத்தமாக இருந்ததும் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். படையப்பா படத்தைப் பொறுத்தவரையில், நீலாம்பரி கேரக்டர் வென்றால் மட்டுமே படம் ஓடும் என்பதால் மிகுந்த தேடலுக்கு பின்னரே ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் என்றும் ரஜினி வீடியோவில் கூறியிருக்கிறார், முதலில் இந்த படத்திற்காக ஐஸ்வர்யராய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் . ஆனால் அவரது கால் சீட் கிடைக்கவில்லை இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்யப்பட்டதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
படையப்பா படம் குறித்த வதந்தி குறித்து ரஜினி கூறும் பொழுது படையப்பா படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவை மையமாக வைத்து தான் நீலாம்பரி பாத்திரம் புனையயப்பட்டு இருக்கிறது என புரளிகள் கிளம்பின. நான் ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக பேசியிருந்தேன் . இதனால் எனக்கும் அவருக்கும் இடையே மோதல் இருந்ததாக வெளியே பேசப்பட்டு வந்தது. இந்த படம் வெளியான பிறகு ஜெயலலிதா படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பியதாக எனக்கு தகவல் தெரிந்தது . அப்போது கலைஞர் தான் முதலமைச்சர் அவர் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார் .
ஆனால் ஜெயலலிதாவுக்கு படத்தை காட்ட வேண்டாம் என சிலர் பயந்தார்கள் ஆனால் இதில் என்ன இருக்கிறது என படையப்பா படச்சுருளை போயஸ்ஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தேன். ஜெயலலிதா படத்தை பார்த்துவிட்டு மிக நன்றாக இருப்பதாக கூறினார் என கேள்விப்பட்டேன் என்று தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறும்பொழுது படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்தபோது எனக்கு டக்குன்னு படையப்பா எனத் தோன்றியது என்னுடைய நிறைய படங்களுக்கு நான் தான் தலைப்பு வைத்திருக்கிறேன். ஆனால் படையப்பா என்று நான் சொன்னதும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் படை சொறி என்றெல்லாம் என்னை கிண்டல் செய்தார்.
இந்த தலைப்பை வைப்பதற்கு அவர் தயங்கினார் இருந்தாலும் நான் என் பிடிவாதத்திலிருந்து மாற மாட்டேன் என அவருக்கு தெரிந்ததால் ஒருவழியாக சம்மதித்தார் . பின்பு ஒரு முறை தயானந்த சரஸ்வதியை சந்தித்தபோது இந்த தலைப்பை கூறினேன் . அவர் பார்த்து ஆச்சரியப்பட்டு அட ஆறு படையப்பா போல் இருக்கிறது என்றார். பின்பு தான் டைட்டிலில் முருகனின் வேல் இருப்பதை போல் படத்தை சேர்த்தோம் . படத்தில் நடிகர்கள் பற்றி யோசிக்கும் பொழுது நீலாம்பரி பாத்திரத்திற்கு ஐஸ்வர்யாராய் தான் மனதில் தோன்றினார். அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தோம் . ஒருவேளை ஒரு வருடம் கூட காத்திருக்க சொல்லி இருந்தால் நான் காத்திருப்பேன்.
ஏனென்றால் நீலாம்பரி பாத்திரம் தான் அந்த படமே அதன் பிறகு தான் ஐஸ்வர்யாராய்க்கு இதில் நடிக்க விருப்பமில்லை என எனக்கு தெரிந்தது.
அவரும் கால் சீட் இல்லை என்று கூறிவிட்டார் அதன் பின்னர் அவரை நாங்கள் தொந்தரவு செய்யவில்லை ரவிக்குமார் சிபாரிசின் பெயரில் தான் ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் . படையப்பா படம் என் சினிமா வாழ்க்கையில் 25 வது கழித்து நடித்த படம். எனது 25 வருட வாழ்க்கையில் அதற்கு முன்பாகவே சொந்தமாக ஒரு படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன் .
அதன்படி படையப்பா படத்தில் என் நண்பர்களின் பெயரை போட்டு நானேதான் . அந்த படத்தை தயாரித்தேன் படத்தின் மூல கதையும் என்னுடையதுதான் கல்வியின் பொன்னியின் செல்வன் நாவலும் அதில் உள்ள நந்தினி பாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தது நந்தினி மாதிரி ஒரு பாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்து சில வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்த கதைதான் படையப்பா அதனை கே எஸ் ரவிக்குமாரிடம் கூறினேன் அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது .அவரே அருமையாக திரைக்கதை வசனமும் எழுதிக் கொடுத்தார் . படையப்பா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டும் என்று சொன்னேன் .
ரவிக்குமார் மீண்டும் தயங்கினார். நீங்கள் போய் அவரிடம் கதையை சொல்லுங்கள் என்றேன். அவர் சிவாஜியிடம் கதை சொன்னார் சிவாஜி கணேசனும் சம்மதித்தார் . ஆனாலும் அவர் பெரிய சம்பளத்தை கேட்கிறார் என்று கேஸ் ரவிக்குமார் தயங்கினார்.சிவாஜி கணேசனை பொருத்தமட்டில் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு தான் சூட்டிங் இருக்கும் அதற்கு இவ்வளவு பெரிய சம்பளமா? என கேஎஸ் ரவிக்குமார் பின்வாங்கினார் . அவரிடம் நான் சொன்னபோது நாம் தான் அவரிடம் சென்று கேட்டோம். இப்போது சம்பளத்திற்காக அவரை வேண்டாம் என்று சொன்னால் நம்மை விட கேவலம் யாரும் இருக்க மாட்டார்கள் என்றேன் .
அடுத்த நாளே அவரிடம் சென்று ஒரே பேமண்டாக சம்பளத்தை கொடுத்து ஆசி வாங்கினோம். அந்த வயதிலும் சிவாஜி சார் சூட்டிங் சமயத்தில் யாரும் தன்னை முந்தி விடுவார்களோ என தீவிரமாக உழைத்துக் கொடுத்தார் , உணவு இடைவேளையின் போது என்னை அழைத்து ,சிவாஜி சார் டேய் நான் பிரபு விடமும் ராமுவிடமும் உன்னை பற்றி பேசுவேன். இவன் ஏன் இமயமலை எல்லாம் சுற்றுகிறான் . வருடத்திற்கு ஒரு படம் என்று எடுக்கிறான் எனச் சொல்வேன் . ஆனால் நீ செய்வது தான் சரி இப்போது எனக்கு படப்பிடிப்பு இல்லை என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை அடைத்து வைத்தது போல் ஆகிவிட்டது.
நீ நேரத்தை எப்படி செலவிடுவது என கற்றுக் கொண்டாய் என்றார். அது எனக்கு பெரிய பாராட்டு பிறகு சிவாஜி கணேசன் என்னிடம் மேலும் பேசும்போது நான் செத்த பிறகு சுடுகாடு வரை என்னோடு வருவாயா என கேட்டார். நான் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனேன் . வருவேன் என சொன்னேன் . நான் எந்த இறுதி ஊர்வலத்திலும் உடலுடன் போனது கிடையாது . அவர் உடலுடன் நான் சென்றேன். இதில் பணியாற்றிய பலர் இப்போது இல்லை அவர்களுக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் . மேலும் அவர் பேசும் போது இப்போது ஜெயிலர் படமெல்லாம் இரண்டாம் பாகம் வருகிறது .
அதே போல் படையப்பா படம் இரண்டாம் பாகம் ஏன் செய்யக்கூடாது என்று தோன்றியது . அதற்கான ததை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் தலைப்பு நீலாம்பரி அது நன்றாக வந்தது என்றால் . படையப்பா போல இன்னொரு படம் நீலாம்பரியாக இருக்கும் . அது வந்தால் ரசிகர்களுக்கு திருவிழா போல இருக்கும். 25 ஆண்டுகள் கழித்து இந்த படம் வருகிறது இந்தப் படம் தியேட்டரில் கண்டு ரசிக்க வேண்டியது அதனால் , நான் ஓடிடிக்கு கொடுக்கவில்லை டிவியில் கூட சிலமுறை மட்டுமே ஒளிபரப்பு செய்யும் வகையில் சம்மதம் தெரிவித்தேன் இப்போது எனது பிறந்தநாள் அன்று படையப்பாவை பார்த்து மகிழுங்கள் என்று கூறியிருக்கிறார் ,
முன்னதாக சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements


