Ooty Toy Train: சேவை ரத்து..!

Advertisements

ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து..!

குன்னூர் மலைரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3-ந் தேதி இரவு பெய்த மழைக்கு, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணி முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் மலை ரெயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் மலை ரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளன. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரெயில் சேவை வருகிற 16-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *