Onam: சென்னை மலையாள மக்களுக்குக் குட்நியூஸ்!

Advertisements

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளைக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். எனவே மகாபலி மன்னனுக்கு அத்தப்பூ கோலமிட்டு, வீட்டை அலங்கரித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை ஒட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஓணம் பண்டிகையை ஒட்டிச் சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செப்டம்பர் 2ஆம் தேதி பணி நாளாகச் செயல்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *