
அரசு ஊழியர்களின் மிக நீண்ட போராட்டத்தின் முடிவாக வருகிற ஜனவரி மாதம் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக, கடந்த தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்தார்கள். ஆனால் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் பழைய பென்ஷன் திட்டம் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அதேசமயம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும்பொழுது புதிய பென்ஷன் திட்டமே எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து இடைவிடாது போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், முன்னதாக கடத்த பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி தலைமையில் , ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் ஓபிஎஸ் மற்றும் சிபிஎஸ் யூபிஎஸ் அதாவது பழைய ஓய்வு திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த குழுவினர் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் எல்ஐசி போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து தற்பொழுது தீவிரமான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
சுகந்திப் சிங் பேடி குழுவினருடன் தமிழ்நாடு அமைச்சர்கள் ஏவா வேலு , தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தற்பொழுது விரிவாக விவாதித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அரசின் நிதி நிலைமை மற்றும் அரசு ஊழியர்களின் நலன் ஆகிய இரண்டையும் சமன்படுத்தும் வகையில் எந்த திட்டம் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள் சுகன் தீப்சிங் பேடி குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்த இறுதி அறிக்கை தொடர்பாகத்தான் தற்பொழுது பரபரப்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
சுகன்தீப் சிங் தலைமையிலான குழுவினர் மூன்று வகையான பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்து முடிவாக பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது.தமிழக அரசை பொருத்தவரையில் நிதி பற்றாக்குறை திண்டாட்டத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் மிகவும் நெருங்கி விட்டதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காவிட்டால் அது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாகும் என அமைச்சர்கள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுவதால் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி சமன்பாட்டில் இருந்து பணத்தை பங்களிக்கலாம் என ஒரு ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் அடிப்படையில் , டிசம்பர் இறுதியில் சுகன்தீப் சிங் பேடி தலைமையிலான இறுதி அறிக்கையை பரிசீலனை செய்து ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் பழைய டென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தெரிகிறது, தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் திட்டம் திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவல்லாமல் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுக தரப்பிற்கு மிகவும் சாதகமாகும் என்பதாலும் பழைய ஓய்வூதிய திட்டம் நிச்சயமாக அமுக்கு வரும் என்று தெரிகிறது. அதேசமயம் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதன் மூலம் திமுக அரசுக்கு தமிழ்நாடு அரசை சேர்ந்த சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்கு கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என தெரிகிறது.



