NZ vs SA 1st Test: 4 முன்னணி வீரர்களை இழந்து தடுமாற்றம்!

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.2-வது நாளில் தென் ஆப்பிரிக்கா 80 ரன்களுக்குள் 4 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது.

மவுண்ட் மவுன்கானுய்:தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களும், வில்லியம்சன் 118 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணி வீரர்களில் நீல் பிராண்ட் 4 ரன்களிலும், ரேனார்ட் வான் டோண்டர் ரன் எதுவுமின்றியும், எட்வர்டு மூர் 23 ரன்களிலும், சுபைர் ஹம்சா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

2-வது நாளில் தென் ஆப்பிரிக்கா 80 ரன்களுக்குள் 4 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது. டேவிட் பெடிங்காம் 29 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளும், சான்ட்னர் மற்றும் மேட் ஹென்ரி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *