Trichy:காதலிப்பதாகக் கூறி உல்லாசம்.. பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

Advertisements

பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

திருச்சி:திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பல முறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வவிக்னேஸ்வரனை கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *