ஜப்பானில் பதக்கம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிங்கங்கள்.. தலா ₹30 லட்சம் பரிசு.!

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சாதனையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களைப் போல திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *