New Delhi:உச்சநீதிமன்ற விசாரணையைப் படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு முதன்முறையாக அனுமதி!

Advertisements

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளைப் படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது என்பது பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் வெளிப்படைத்தன்மைக்காக இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைப் பலரும் வரவேற்றனர். இதன்மூலம் விசாரணையில் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் வாதங்களை அனைவரும் அறிய முடிந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 7 அமர்வுகள் கொண்ட சிறப்பு லோக் அதாலத் வரலாற்றில் முதல்முறையாக, நீதிமன்ற அறைகளில் வழக்கு நடைமுறைகளைப் படம்பிடிக்க செய்தி ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி சேனல்கள் வாயிலாகவும் விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் காண முடியும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *