வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்ய இராணுவம் முயற்சிக்கும்;ரஷ்ய அதிபர் புடின்

போர் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்ய இராணுவம் முயற்சிக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை, முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார். ஆனால், உக்ரைன், ரஷ்யாவின் முரண்பட்ட கோரிக்கைகளால் அமைதி முயற்சி முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன. இதுதொடர்பாக, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த, நிலையில் ரஷ்யாவின் உயர் இராணுவ அதிகாரிகளுடனான வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியப் போது, போர் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தால், ரஷ்யா தனது வரலாற்றுப் பிரதேசங்களை இராணுவ வழிகளில் விடுவிக்கும் எனக் கூறினார். தொடர்ந்து, தாக்குதலை விரிவுபடுத்த ரஷ்ய இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *