Pregnant woman: உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன்!

Advertisements

கர்ப்பிணி என்றும் பாராமல் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன்!

வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்த கணவரைக் கண்டித்ததால் கர்ப்பிணி மனைவி என்று கூடப் பாராமல் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். நான்கு மாத கர்ப்பிணியாக நந்தினி இருந்து வந்தார்.


இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் எனக் கணவரை மனைவி மிரட்டி உள்ளார்.

புல் மப்பில் இருந்த கணவர்  நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் எனக் கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றித் தீ வைத்து எரித்து விட்டு மகனைத் தூக்கி சென்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *