Navratri Special: நெய் மைசூர் பாக்!

நவராத்திரி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்!

மைசூர் பாக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்த மைசூர் பாக் நீங்கள் ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்யலாம்.  10 நிமிடத்தில் மிகவும் சுவையான நெய் மைசூர் பாக் ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நெய் மைசூர் பாக் – தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – கால் கப்

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் 1 கப் கடலை மாவு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடலை மாவு நன்றாக வறுபடும் வாசம் வரும் வரை கிண்ட வேண்டும்.பின் வறுத்த கடலை மாவை நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மாவு Soft ஆக இருக்கும்.

பின் அதே கடாயில் 1 1/2 கப் நெய் சேர்த்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் கடலை மாவுடன் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாகக் கிண்ட வேண்டும்.பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 கப் அளவு சர்க்கரையை போட வேண்டும். அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை பாவு நன்றாகக் கொதித்த பின் அதில் நாம் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து இடை விடாமல் கிண்ட வேண்டும்.நாம் பயன்படுத்தியதில் மீதமுள்ள எல்லா நெய்யையும் இதில் சேர்த்து நன்றாகக் கிண்ட வேண்டும்.கடலை மாவும் சர்க்கரை பாவும் நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பிலிருந்து இரக்க வேண்டும்.


பிறகு ஒரு கிண்ணம் முழுவதும் நெய் தடவி அதில் இந்தக் கலவையைச் சேர்த்து 5 நிமிடங்கள் ஆறவிட வேண்டும்.5 நிமிடங்கள் கழித்து நமக்குத் தேவையான அளவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே 10 நிமிடத்தில் மணக்கும் நெய் மைசூர் பாக் ரெடி.! இந்த மாதிரி மணக்கும் நெய் மைசூர் பாக் நீங்களும் நவராத்திரிக்கு  உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *