
புதுடெல்லி: ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டு திருவள்ளூர் – திருப்பதி இடையே நாலு வழி சாலை அமைய இருக்கிறது. இந்தச் சாலையில் திருவள்ளூரிலிருந்து திருப்பதிக்கு 90 நிமிடங்களில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணி வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மற்றும் திருப்பதி இடையே பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் முடிவடைந்து சாலை பயணத்திற்காகத் திறக்கப்பட்டதும் திருவள்ளூரிலி
புதிதாக அமைக்கப்பட இருக்கும் நான்கு வழி பாதையில் 44 கிலோ மீட்டர் சாலையில் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அங்கு மட்டுமே அணுகு சாலைகள் இருக்கும் என்றும் மற்றபடி உள்ளூர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளே வருவதற்கோ அல்லது சாலையிலிருந்து வெளியே செல்வதற்கோ வாய்ப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய திட்டத்தின்படி தற்போதைய இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலையாகச் சர்வீஸ் சாலைகளுடன் விரிவுபடுத்தப்படுகின்றது. உள்ளூர் பயணிகளுக்கு உதவும் விதத்தில் முக்கிய சந்திப்புகளில் 20 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்.எச். – 716 சென்னை திருப்பதி நெடுஞ்சாலை பாடியிலிருந்து திருநின்றவூர் வரை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ளது. இதில் இடையே உள்ள திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் இடையேயான சாலை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும்.
இதன் மூலம் சென்னையில் இருந்த திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகள் திருவள்ளூரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கப் பைபாஸ் களை பயன்படுத்த முடியும்.

