Nanguneri: உடல் நலம் விசாரித்த முதல்வர்!

Advertisements

Nanguneri | Caste | Student | Attack

நாங்குநேரியில்பள்ளி மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சின்னத்துரை தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தார்…

நெல்லை: நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர். இந்நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை தாயார் அம்பிகாபதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *