AIADMk: முன்னாள் அமைச்சர்மீது வழக்கு!

Advertisements

AIADMK | R. T. Inbathamilan

பணம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு…

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான இன்பத்தமிழன் மீது சார் பதிவாளர் முத்துசாமி கடந்த 16-ம் தேதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தன்னை செல்போனில் தொடர்பு கொண்ட இன்பத்தமிழன் தான் ஒருநபரை அனுப்பி வைப்பதாகவும், அவரிடம் ரூ.10,000 கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கூறியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாகச் சார் பாதிவாளர் முத்துசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மான்ராஜ், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நகர செயலாளருமான இன்பத்தமிழனிடம் இப்பிரச்சனை தொடர்பாகப் பேசி இருக்கிறார். ஏற்கனவே சார் பதிவாளர் முத்துசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறைகளிடம் இன்பத்தமிழன் புகார் அளித்து இருப்பதாகவும் அந்தப் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மான்ராஜிடம் தெரிவித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போலீசார் அரசு அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *