Namakkal: நாமக்கல் – இரவு நேர விற்பனைக்கு… போலி மதுபானம் தயாரித்த உடன்பிறப்புகள்!

Advertisements

இரவு நேர வியாபாரத்திற்கு பாண்டிச்சேரியிலிருந்து ஐம்பது லிட்டர் கேன்களில் ஸ்பிரிட் வரவழைத்து போலி மதுபானங்கள் தயாரித்து பார்களில் வைத்து விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் சப்ளை செய்தவர்களை மத்திய புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி அடுத்த பனங்காட்டுபாளையம், எப்பொழுதும் மக்கள் நடமாட்டமுள்ள பிஸியான ஏரியா! திருச்செங்கோடு திமுக பெண் கவுன்சிலரின் கணவர் வட்டூர் தங்கவேலுவுக்கு சொந்தமான குடோனில், வட்டூர் பெத்தாம்பட்டி மாதேஸ் (எ) மாதேஸ்வரன் போலி மதுபானம் கடந்த இரண்டு வருடங்களாக தயாரித்து, நாமக்கல் மாவட்டத்தை தாண்டி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இதில வட்டூர் தங்கவேலு திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளராம். மாதேஸ்வரன் தங்கவேலுவின் தீவிர ஆதரவாளர் என்கின்றனர் உள்ளூரில்.

பனங்காட்டுபாளையம் போலி மதுபான ஆலையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர் மேற்படி போலி மதுபான ஆலையைப் பற்றி திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு நிறைய புகார்கள் அனுப்பியும் உரிய ரெஸ்பான்ஸ் இல்லாததால், மத்திய புலனாய்வு பிரிவுக்கு புகார்களை தட்டிவிட, அவர்கள் கூட்டமாக வந்து இறங்கிய இடம் இராசிபுரம். அங்கே போலி மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக சப்ளை பண்ணிக்கொண்டிருந்த விக்னேஷ், பூபாலன் இருவரையும் பிடிக்க, அவர்கள் தப்பிக்க, போலீசார் விரட்டி பிடிக்க அதன்பிறகு மேற்படி இருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பனங்காட்டுபாளையத்தில் உள்ள மதுபான தயாரிப்பு ஆலைக்குள் நுழைந்த போலீசார், ஐந்தாயிரத்து நானூறு லிட்டர் ஸ்பிரிட், அறுபதாயிரம் பாட்டில்கள், நாற்பதாயிரம் மூடிகள், மதுபாட்டில்களை சப்ளை செய்ய உபயோகப்படுத்தும் மூன்று வேன், ஆட்டோக்கள், பத்துக்கும் மேற்பட்ட டூவீலர்கள், கூடவே ஐந்து பேரை மட்டும் கணக்குல காட்டி இருக்காங்க அது என்ன கணக்கோ?
நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆய்வாளர் சுல்தான் தலைமையில் போலீசார் மிக தாமதமாக தேட ஆரம்பிச்சி இருக்காங்க, குறிப்பா பதின்மூன்று அரசு மதுபான கடைகளில் பகலில் வியாபாரம் நடப்பதுபோலவே இரவிலும் நடக்குமாம்.

குடிமகன்களிடம் இப்படிப்பட்ட தகவல்களை சேகரித்து இருக்கின்றனர் போலீசார். இராசிபுரம், பரமத்திவேலூர், மோகனூர், சேந்தமங்கலம் கொல்லிமலை ஏரியா போலி மதுபான விற்பனையாளர்கள் பட்டியலை வாங்கி கையில வச்சிகிட்டு பனங்காட்டுபாளையம் போலி மதுபான ஆலையில் பட்டியலை வாங்கி கையில வச்சிகிட்டு தேட ஆரம்த்திருக்கிறது போலீஸ். விஷயம் வெளியில் வராமல் உள்ளூர் போலீஸ் தரப்பில் அதிகம் அக்கறை காட்டுவதாக ஆளுங்கட்சி உடன்பிறப்புகள் சிலரே குறைபட்டுக் கொள்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூரில் பாஜக வேட்பாளர் கே.பி.இராமலிங்கத்தை ஆதரித்து தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தபோது மேற்படி போலி மதுபான ஆலை பிடிபட்டது பற்றி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த தகவலை வெளியிட்டு, திமுக பிரமுகர்ன்னு சொல்றீங்களே யார் அந்த பிரமுகர்னு எழுதமாட்டீங்களா..? என்று ஊடகங்கள் மீது பாய்ந்தார். அதன்பிறகே விஷயம் பரபரப்பானது, வெளியில் தெரியஆரம்பித்தது.

சரி வட்டூர் தங்கவேலு யாருன்னு கேக்கறீங்களா..? நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்திலுக்கு பினாமியாம், ஆளுங்கட்சி போர்வையில் செய்யக்கூடிய வேலையா இது? போலி மதுபானம் தயாரித்தவர், அதற்கு இடம் கொடுத்தவர், அவரை தன் நிழலில் வைத்து காத்தவர், என ஒட்டுமொத்தமாய் திமுகவை திரும்பி பார்க்க வைக்கிறதே? இதெல்லாம் திமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தாதா? என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாதா… உளவுத்துறை தன் கடமையை மறந்துவிட்டதா.. தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இந்த மாதிரி செய்தி டென்ஷன்தான்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *