Broiler chicken:சர்ரு சர்ருனு ஏறிய கோழி.. வஞ்சனை செய்யும் வஞ்சிரம் மீன்!

Advertisements

சென்னை: மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளதால் மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. குறைந்த ஆழத்திலேயே மீன்களைப் பிடித்து விற்பனை செய்வதால், விற்பனைக்கு வரும் மீன்களின் விலையும் ஒரேயடியாக அதிகரித்துவிடுகிறது.

காசிமேடு: சென்னை காசிமேட்டிலும் மீன்கள் வரத்தும் குறைந்துள்ளது. நேற்றுமுன்தினம், காசிமேடு மார்க்கெட்டில் வஞ்சரம் – ரூ.1400, சங்கரா – ரூ.400, வவ்வால் – ரூ.750, கொடுவா – ரூ.600, நண்டு – ரூ.350, காணங்கத்தை – ரூ.200, ஷீலா – ரூ.500, இறால் – ரூ.400 விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஷீலா மீன்களின் விலை மட்டுமே குறைவு என்பதால், பலரும் ஷீலா மீனை வாங்கி சென்றனர்.

 

கோவையைப் பொறுத்தவரை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. இப்போது தடைக்காலம் என்பதால், உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு: அதாவது, வழக்கமாக ரூ.700க்கு விற்பனையாகும் வஞ்சிரம் மீன் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்களும் கிலோவுக்கு ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபிறகுதான் விலை குறைந்து பழைய நிலைக்கு விற்பனை செய்யப்படும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். தற்போது கோடை மழை பெய்து வருவதால், மீன்கள் வரத்து பாதியாகக் குறைந்து விட்டதும், மீன்விலை உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், மீன்கள் டிமாண்டு காரணமாகச் சிக்கன் விலையும் அதிகரித்து விட்டது.. கடந்த வாரம், 1 கிலோ சிக்கன் 260 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பிராய்லர் கோழி: இப்போது, சென்னையில் பிராய்லர் கோழியின் விலை அதற்குமேல் உயர்ந்துவிட்டது.. சென்னையில் ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.320 முதல் ரூ.380 வரை விற்பனை ஆகிறது. இதற்குக் காரணம், கோடையில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால், பிராய்லர் கோழி விலை உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இதே விலைதான் விற்கப்படுகிறது. ஏற்கனவே மீன்கள் விலை உயர்வால், மீன்பிரியர்கள் நொந்துபோயுள்ள நிலையில், இப்போது சிக்கன் விலையும் உயர்ந்துள்ளதால், அசைவ பிரியர்கள் உச்சக்கட்ட கவலையில் ஆழ்ந்துள்ளனர்..!!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *