Nainar Nagendran: வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரே வாக்கு சேகரித்த நயினார் நாகேந்திரன்!

கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரே தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி வாக்கு சேகரித்த நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி டவுன் பகுதியை அடுத்த சொக்கட்டான் தோப்பு பகுதியில்உள்ள மக்களிடம் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வாக்கு சேகரித்தார்.இந்த முறை தாமரையில் நிற்கிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள் எனச் சொக்கட்டான் தோப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னரேவேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நயினார் நாகேந்திரன்.

இந்த முறை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் தற்போது வரை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை,

ஏற்கனவே திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து பணியாற்றி வரும் நயினார் நாகேந்திரன் தற்போது தான் போட்டியிட போவதாகவும் தனக்கு தாமரை சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் எனவும் கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.

திருநெல்வேலி டவுன் பகுதியை அடுத்த சொக்கட்டான் தோப்பு பகுதியில் நியாய விலைக் கடையைத் திறந்து வைத்தவர், அப்பகுதியில் உள்ள மக்களிடம் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *