Nainar Nagendran: பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Advertisements

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்தும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் பேச்சைக் கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை:தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சிறப்புக் கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்தும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் பேச்சைக் கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *