Nagercoil To Tambaram Special Trains: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Advertisements

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் 5 நாட்கள் விடுமுறை இன்றோடு முடிவடைவதையடுத்து பயணிகள் சென்னை திரும்பும் வகையில், நாகர்கோவிலிலிருந்து சிறப்பு ரயிலைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறையின் காரணமாகத் தங்களது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.  இந்தநிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையானது இன்றோடு முடிவடைகிறது நாளை முதல்  பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மூலமாக 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் வெளியூருக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நாளை மீண்டும் வழக்கமான பணி தொடங்குவதால் மீண்டும் சென்னை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டமானது நிரம்பி வழிகிறது.

இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக நாகர்கோவிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயிலானது ( ரயில் எண் 06128/ 06127) நாகர்கோவிலிருந்து இன்று மாலை 4:30 மணிக்குப் புறப்படுகிறது இந்த ரயில் தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.10 மணியளவில் வந்து சேருகிறது. மேலும் இந்த ரயில் நாளைக் காலை 8 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

சிறப்பு ரயில் சேவை;

இந்த ரயிலில் 11 ஏசி பெட்டிகளும் ஐந்து முன்பதிவு பெட்டிகளும் இரண்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 4:30 மணியளவில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாகத் தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவானது தொடங்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *