நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்தது இதனால் நாகை மாவட்டத்தில் பயிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று தீபாவளிக்கு முன்பு வரை நல்ல மழைப்பொழிவு இருந்தது. அதன்பிறகு கடந்த 2 தினங்களாக மழை இல்லாமல் இருந்தது பொதுமக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் அம்மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் மட்டும் கிட்டதட்ட 17 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்தது.
இதனால் நாகை மாவட்டத்தில் பயிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.சுமார் 10, 000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது குறிப்பிடத்தக்கது.மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ., கடலூரில் 12 செ.மீ., பரங்கிப்பேட்டை 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அங்கும் பயிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.