Taapsee Pannu: சூரியனுக்கே டஃப் கொடுக்குறாங்களே.. டாப்ஸியின் க்யூட் போட்டோஸ்!

நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை டாப்ஸி பன்னு ஜும்மாண்டி நாடம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா என்ற பாடல் வரிகள்மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் டாப்ஸி.

இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. வந்தான் வென்றான், வை ராஜா வை, காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனிடையே பாலிவுட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். பேபி, பிங்க், மன்மர்சியான் , பட்லா, மிஷன் மங்கள், தப்பாட் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் டாப்ஸி நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான டங்கி படத்தில் டாப்ஸி ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும்.

தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனபெல் சேதுபதி படத்தில் டாப்ஸி கடைசியாக நடித்திருந்தார். எனினும் இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியா போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் டாப்ஸி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சம்மர் வெகேஷனுக்கா உதய்பூர் சென்றுள்ள டாப்ஸி, அங்குள்ள குளத்தில் சில் செய்யும் போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார்.

மஞ்சள் நிற புடவையில் க்யூட்டாக இருக்கும் அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *