Mylapore: 1.50 கோடி ரூபாய் பணம் பறிப்பு.. போலீசார் விசாரணை!

மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் 1.50 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 லட்சத்தை மட்டூமே பறித்துச் சென்றதாகப் புகார் அளித்துள்ள நிலையில்  போலீசார் விசாரணைநடத்திவருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் நேற்று இரவு சாய்பாபா கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடமிருந்து ரூபாய் 1.50 கோடி ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து விட்டதாகச் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மேலாளர் ஆன வினோத்குமார் என்பவர் அளித்த புகாரில் தனியார் பள்ளிக்குச் சொந்தமான 1.50 கோடி ரூபாய் பணத்தை பள்ளியின் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் தனியிடமிருந்து இரண்டு லட்ச ரூபாயை மட்டும் பறித்துகொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் சம்பவத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிரவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முதலில் காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட வினோத்குமார் 1.50 கோடி ரூபாயை வழிப்பறி செய்து விட்டதாகத் தெரிவித்த நிலையில், புகாரியில் 2 லட்ச ரூபாய் மட்டுமே பறித்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தப் புகாரின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *