ரொமான்டிக் காமெடியாக உருவாகும் ‘ஹார்ட்டின்’!

சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஹார்ட்டின்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படமாகும், மற்றும் அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இதனை இயக்குகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு முகேஸ் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

படத்தின் இயக்குநர் கிஷோர் குமார் கூறுகையில், “இது நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கதை. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சென்னை, ஜெய்ப்பூர், ஊட்டிப் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *