பஞ்சாப்க்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு துவகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தின் தலித் அரசியல் என்பது பெரும்பாலும் பெரிய அளவில் விவாதிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பஞ்சாபில் தலித் மக்களின் வாக்கு வங்கி எப்படி காங்கிரஸ், அகாலி தளம், மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற பாரம்பரியக் கட்சிகளிடமிருந்து விலகியது. இது எப்படி ஆம் ஆத்மிக்கு பெருமளவில் மாறியது என்பதை மிக ஆழமாக பார்க்கப் போகிறோம்.
நம் நாட்டில் மொத்தம் உள்ள பட்டியலின மக்களின் பங்கு தோராயமாக 16.6 சதவிகிதமாகும். . ஆனால், பஞ்சாபில் இந்த விகிதம் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31.9 சதவிகித அளவில் உள்ளது. நம் நாட்டின் மொத்த பட்டியலின மக்கள் தொகையில் சுமார் 4.4 சாவிதினர் பஞ்சாபில் வாழ்கின்றனர். பஞ்சாபில் உள்ள பட்டியலின மக்களிடையே சாமார்கள், ஆத்-தர்மி, மற்றும் ராம்தாசியக்கள் ஆகியோரின் அமைப்பு ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது.
அதேசமயம், மஜாபிகள் மற்றும் வால்மீகிகள் போன்ற பிற பிரிவினர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியே உள்ளனர். சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்கள் சாதி பாகுபாடுகளை மறுக்கின்றன. ஆனால் பஞ்சாபிலுள்ள கிராமங்களில் சாதி அடையாளங்களும், அதையொட்டிய சமூக விலக்கல்களும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றன.
2022ம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி நிகழ்த்திய சாதனை நாட்டின் அரசியலையே உலுக்கியது: பஞ்சாவிலுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது.பாஞ்சாபில் பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 34 தொகுதிகளில், ஆம் ஆத்மி மட்டும் 29 இடங்களில் வெற்றி பெற்றது. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வளவு தொகுதிகளை வெற்றி பெற்றதில்லை..
அது மல்வா பகுதியிலுள்ள 20- தொகுதிகளில் 19 இடங்களையும், தோவாபா மற்றும் மஜா பகுதிகளிலுள்ள 14- தொகுதிகளில் 9 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கைப்பற்றியதுகாங்கிரஸ் சாதி, வகுப்புவாத நிலைப்பாடுகளைத் தவிர்த்து அனைத்து சமூகங்களையும் அரவணைப்பதாக இருக்கிறது. அப்படியிருந்தாலும், தலித் மக்கள் தங்களை வெறும் அடிமை வாக்காளர்களாக நடத்துவதை நீண்ட காலமாக எதிர்த்து வந்தனர். ஆட்சி அதிகாரத்தில் உண்மையான பங்களிப்பு வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மாற்றைத் தேடத் தொடங்கினர்.
2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சரஞ்ஜித் சிங் சன்னியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தலித் வாக்குகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயன்றது. அப்படி இருப்பினும், கட்சியின் உள்கட்சி மோதல்கள், நவஜோத் சிங் சித்துவுடனான அதிகாரப் போட்டி மற்றும் தலித் அடையாள அரசியலைத் தாண்டி முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த வியூகம் படுதோல்வி அடைந்தது. இதன் விளைவாக காங்கிரஸ் 18 இடங்களை மட்டுமே பெற முடிந்தது
அகாலி தளம் அடிப்படையில் மதம் மற்றும் அரசியலை இணைத்துப் பேசினாலும், 1962 முதல் அது ஜாட் சீக்கியர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது. சீக்கியர்களின் மத வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களை நிர்வகிக்கும் சிறுவன் மணி குருத்வாரா பிரபந்தக் குழு சுருக்கமாக எஸ் ஜி பி சி போன்ற முக்கியச் சீக்கிய அமைப்புகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு பதவிகளில் 80 சதவிகிதம் ஜாட் சீக்கியர்களிடமும், தலித் சீக்கியர்களுக்கு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சமூக விலக்கல் காரணமாகவே தலித் மக்கள் அகாலி தளத்தை விட்டு விலகி செல்லத் தொடங்கினர். விவசாயச் சட்டங்களுக்கு எதிரான கடும் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சிரோன்மணி அகாலி தளத்துடன் நீண்ட நெடிய கூட்டணியை வைத்திருந்ததாலும் பாஜகவுக்கும் தலித் வாக்குகள் கைகூடாமலேயே இருந்தது. பஞ்சாபில் தலித் மக்கள் கணிசமாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சியால் அங்கு வலுவான காலூன்ற முடியவில்லை. 1992-ல் 16.32 சதவிகிதமாக இருந்த ஙிஷிறி-யின் வாக்கு வங்கி, 2022 தேர்தலில் 1.7 சதவிகிதமாக குறைந்தது.
வெறும் சாதி அடையாளம் அல்லது வெறும் கோஷங்களை மட்டும் நம்பியிராமல், வாக்காளர்கள் தங்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்தனர். பகுஜன் சமாஜ் கட்சியில் அடிமட்ட கட்டமைப்பு மற்றும் முறையான சமூக-அரசியல் திட்டமிடல் இல்லாததே அதன் தொடர் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும் உத்தர பிரதேசத்தில் மாயாவதிக்கு கிடைத்த வீழ்ச்சியும் பஞ்சாபிலும் அக்கட்சியின் சரிவுக்கு பெரும் காரணமாக அமைந்தது.
கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து ஊழலிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்திற்கு ஒரு பாடம் புகட்ட மக்கள் துடித்தனர். டில்லியில் ஆம் ஆத்மி அரசு நடைமுறைப்படுத்திய கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பஞ்சாப் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மற்றும் பெண்களின் கணக்குகளில் மாதந்தோறும் உதவித்தொகை போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பெண்களையும் இளைஞர்களையும் ஆம் ஆத்மி பக்கம் ஈர்த்தன.
நகைச்சுவை நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த பகவந்த் மனின் எளிமையான பேச்சு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் ஒட்டுமொத்த தலித் வாக்கு வங்கியும் அப்படியே ஆம் ஆத்மிக்கு மாறி சுலபமாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தியது..தற்போது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் நான்கு தலித்துகள் இடம்பெற்று இருக்கிறார்கள். அதேபோல பஞ்சாப் மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலிலும் பார்த்து பார்த்து தலித்துகளுக்கான முன்னுரிமையை ஆம் ஆத்மி க வழங்கி வருகிறது.
காங்கிரசில் நிலவும் உள்கட்சி பூசல் ,பாஜக சிரோன்மணி அகாலிதளம் மீண்டும் கூட்டணி வாய்ப்பு ஆகியவை தங்களுக்கான தலித் வாக்கு வங்கியை பாதிக்காது என ஆம் ஆத்மி திடமாக நம்புகிறது. அப்படியிருந்தாலும் சில வாரங்களுக்கு முன்பு குல்சர் என்ற தலித் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும்பூதாகரமான விஷயமாக மாறி இருக்கிறது. பஞ்சாபின் நிதித்துறை அமைச்சர் ஹர்பல் சிங் சீமா பஞ்சாபில் அதிகரித்திருக்கும் போதை பொருள் புழக்கம் குறித்து கேள்வி எழுப்பிய தலித் சமூகத்தை சேர்ந்த குல்சர் என்ற நபரை ஜாதிய ரீதியில் திட்டியதாக தெரிகிறது.
இதனை அடுத்து தான் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற புகாரை அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.இப்படி இருந்தாலும் அது தங்களுக்கு பாதகமான விஷயமாக மாறாது என்று ஆம் ஆத்மி நம்புகிறது.. இந்த நம்பிக்கை பொய்க்குமா இல்லை நிறைவேறுமா என்பது தேர்தல் களம்தான் முடிவு செய்யும்..

