
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கார்மீது குரங்கு விழுந்ததில் காரின் சன்ரூப் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. அப்போது காருக்குள் விரிந்த குரங்கு உடனடியாக வெளியே குதித்து தப்பி ஓடியது.
தொழிலதிபர் முகேஷ் ஜெய்ஸ்வாலின் கார் கண்ணாடியைத் தான் குரங்கு உடைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. காரின் சன்ரூப் கண்ணாடியைக் குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் படும் அவதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

