
தெலுங்கானா மாநிலம் நக்ரேக்கல் பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்தார்.
தெலுங்கானாவில் முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மறைமுகமாகப் பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய கட்சி காணாமல் போய்விடும்.
பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை மோடி பலவீனப்படுத்தினார். பா.ஜ.க.வின் கஜானாவை நிரப்புவதற்காக மக்களையும், நாட்டையும் கொள்ளையடித்தார்.
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அடிமைகளாக மாற்றுவார்கள். அரசியல் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை அகற்றி உங்கள் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள்.மோடியை வெளியேற்றி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது.
தெலுங்கானா மக்கள் இந்தத் தேர்தலில் கவனமுடன் வாக்களிக்க வேண்டும். உங்களுடைய தேர்வு சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வுக் கவலையை அளிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் முன்னின்று காப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.



