
பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பான எல்லைக்குள் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
குற்றவாளிகளை நாடு கடத்துவதில் உள்ள சவால்களும் தந்திரங்களும் என்னும் தலைப்பில் தில்லியில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பான எல்லைக்குள் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
சிறப்பான இராஜதந்திரம், வலிமையான ஒருங்கிணைப்பு, உலகளாவிய செயல்பாடு ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டுவருவதை உறுதி செய்யவே இந்த மாநாடு நடத்தப்படுவதாக அமித் ஷா தெரிவித்தார்.
இதே மாநாட்டில் பேசிய சிபிஐ இயக்குநர் பிரவீன் சூடு, இந்த ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து 35 குற்றவாளிகளை விசாரணைக்காக நாட்டுக்குத் திருப்பி அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.



