ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன..!

Advertisements

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 36வது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *