புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.

பல்வேறு கண்கவா் நிகழ்வுகளை உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.

சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.  திருவாரூா்த் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி – ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை,  பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா். மேலும், முதல் நிகழ்ச்சியாக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் பாராட்டு விழா நிகழ்வு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *