
மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை உருவாக்கியுள்ளது.
‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான ராஜேஷ்வர் காளிதாஸ் இயக்கத்தில், மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ திரைப்படம்.
வைஷாக் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு சுஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா பாலசந்திரன் கதை எழுதியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கடன், தொழில், அவமானம் மற்றும் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகக் காக்கும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
