மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது!

Advertisements

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகக் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விடக் குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *