Mega Defense Projects: பாதுகாப்பு பலப்படுத்த ஆலோசனை..!

Advertisements

இந்தியாவில் விரைவில் 3 மெகா பாதுகாப்பு திட்டங்கள்..!  பாதுகாப்பு   பலப்படுத்த ஆலோசனை..!!

மூன்று மெகா திட்டங்களுக்காக ரூபாய் 1.4 லட்சம் கோடி   நிதி ஒதுக்கீடு  செய்து  இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதாக  அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா இதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

மூன்று மெகா திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த வாய்ப்புகள் அதிகமாகும் என அறிவித்துள்ளது. 97 தேஜாஸ் போரிடும் ஏர்கிராஃப்ட், 156 ப்ரீசந்த் ஒளிஉமிழும் ஹெலிகாப்டர்கள் தரமானதாக அமைக்கப்படும்.இதற்கான நிதி 1.4 லட்சம் கோடி ரூபாயை  இந்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.

மூன்று மெகா திட்டப்பணிகளை செயல்படுத்த நவம்பர் 30- ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தைல் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவிலேயே  தொடங்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  மெகா திட்டம் செயல்படுத்த நீண்ட காலமாகும். எனினும் இந்திய படைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *