
7 வயது சிறுமியை அடைத்து வைத்துப் பாலியல் சித்திரவதை!
3 மணிநேரம் அடைத்து வைத்துச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவரைப் போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி: ஐதராபாத் மேடிப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் முதல் மாடியில் தனி நபர் ஒருவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.இந்த உடற்பயிற்சி கூடத்தில் 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சக நண்பர்களுடன் விளையாடுவதற்காகச் சிறுமி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.சிறுமி தனியாக இருப்பதை கண்ட உடற்பயிற்சி கூடப் பயிற்சியாளர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு 3 மணிநேரம் அடைத்து வைத்துச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டிலிருந்து விளையாடச் சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மகளைத் தேடிச் சென்றார்.அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமிகளுடன் தனது மகள் இல்லாத இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் மகளைத் தேடி அலைந்து திரிந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சில பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கதவைத் தட்டினர். கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி கூடப் பயிற்சியாளர் கதவைத் திறந்தார்.அவரிடம் சிறுமிகுறித்து விசாரித்தபோது சிறுமி உள்ளே இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது பெண்கள் சிறுமியை ஏன் உடற்பயிற்சி கூடத்திற்குள் நீண்ட நேரம் வைத்திருந்தாயெனக் கேள்வி கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் பயிற்சியாளரைச் சரமாரியாகத் தாக்கி, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடற்பயிற்சி கூடப் பயிற்சியாளரைப் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.



