
5 நிமிடத்தில் மாமன்றம் கூட்டத்தை முடித்த மேயர்!
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் வரி தள்ளுபடி செய்ததை கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மாமன்ற கூட்டம் தொடங்கிய 5 நிமிடத்தில் மாமன்றம் கூட்டத்தைக் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிமுடித்துவைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி திட்டப் பணிகள், மேம்பாட்டு பணிகள், வரி விதிப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகளை மாதந்தோறும் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விவாதம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பேருந்தில் அண்ணா அரங்கத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. கூட்டத்தில் ஒன்றொன்றாக வாசிக்கத் துவங்கிய நிலையில் கூட்டத்தில் 34வது மாமன்ற உறுப்பினர் பிரவீன்குமார் பேசியபோது கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆணையரை மாற்றக் கோரி 30 திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம் நடந்ததை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபொழுது அதற்குப் பதிலளித்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகப் பதில் அளித்ததை கண்டித்து இதனை ரத்து செய்யக்கோரி தொடர் முழக்கமிட்டு ஆணையரிடம் மனு அளித்து வெளியே புறப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 273 பகுதிகளில் உள்ள வீடு, வணிக வளாகம் போன்ற பகுதிகளிலிருந்து ஒரு கோடி 82 லட்சம் மதிப்பிலான வரி முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தொடர் முழக்கங்கள் என இதுக்கு பதிலளிக்கும் படியும் அல்லது இந்தத் தீர்மானத்தை ரத்து செய்யும்படி தொடர்ந்து கூச்சலிட்டனர், ஒரு கோடி 82 லட்சம் மதிப்பில் ஆன வரி ரத்து செய்தால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் இழப்பாக இருக்கும் எனக் கருதி இதனை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடரும் கோரிக்கை வைத்தனர்,
தொடர்ந்து மாமண்ட உறுப்பினர்கள் கூச்சலிட்டதாலும், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஊராட்சிக்கு அடுத்தடுத்து முதலமைச்சர் காணொளி காட்சிமூலம் நலத்திட்ட நிகழ்ச்சி இருப்பதாலும் அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறதாக ஒப்புதல் அளித்துக் கூட்டத்தை ஐந்தே நிமிடத்தில் முடித்துப் புறப்பட்டார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், துணை மேயர் குமரகுருநாதன், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.



