Maxivision Eye Super Speciality Hospital: 100 கண் சிகிச்சை மையங்கள் திறக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Advertisements

சென்னை: மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பல் நோக்கு சிறப்புக் கண் மருத்துவமனைகளை அமைத்துள்ளது.

இக்குழுமம், தமிழ் நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிசிக்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம், 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசிற்கும் மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைச் செயலாளர் வி.அருண் ராய், தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, மேக்சிவிஷன் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஜி.எஸ்.கே.வேலு, தலைமை செயல் அலுவலர் வி.எஸ். சுதீர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *