Massage Center: மஜாவாக நடந்த விபசாரம்.!

Advertisements

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்திய பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மப்டியில் அப்பகுதியை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

பின்னர், குற்றம் உறுதியானதை அடுத்து  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தொடர்பாக உரிமையாளரான பெருந்துறை அடுத்துள்ள சுள்ளிபாளையத்தை சேர்ந்த கமலேஷ் என்பவரின் மனைவி ஈஸ்வரி (40), மேலாளரான சவுகத் அலி (30) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்துஅரை குறை ஆடைகளுடன் 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதேபோலக் கடந்த மாதம் 27-ம் தேதி மசாஜ் சென்டரில் விபசார தொழில் செய்து வந்த 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *