மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு! இணையத்தில் வைரல்!

Advertisements

டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது “மார்க் ஆண்டனி”. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய ரோலில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

Advertisements

இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ரீயட் படமாக உருவாகியுள்ள இந்த படம் இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ளது. அதாவது 1970 களில் நடப்பது போன்றும், 1990 களில் நடப்பது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. முதல் பாடலின் புரோமோ நேற்று மாலை வெளியானது. ஆல் இன் ஆல் டி ராஜேந்தர் இந்த பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி அசத்தி உள்ளார். வரும் 15 அன்று முழு பாடல் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *