Mannargudi: கடைகளை அடைத்து போராட்டம்!

மன்னார்குடியில்  ஆக்கிரமைப்புகளை அகற்றும்போது  வியபார பொருட்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதபடுத்தியதாக கூறி துணை காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதீமன்ற உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாகவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன் தினம் தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்றது.

அப்போது  மன்னார்குடி தற்காலிக பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளை  ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசாரின் ஒத்துழைப்புடன் அகற்றினர்.

அப்போது அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார்  ஆக்கிரமைப்புகளை அகற்றுவதாக கூறி வியபார பொருட்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் 2500 க்கும் மேற்பட்டோர் இன்று  கடைகளை அடைத்து  பேரணியாக சென்று காவல்  துணை கண்காணிப்பாளர்  உள்ளிட்ட போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கண்காணிப்பாளரை  இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்  கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *